மாத்தறை கொடவில நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 52 வயதுடைய சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீண்ட நாட்களாக சுகயீன விடுமுறையில் இருந்து பணிக்கு திரும்பிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று துப்பாக்கியால் சுட்டு கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.