யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சகோதரியும் , சகோதரன் ஒருவரும் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , இரு சகோதரர்களின் சண்டையை விலக்கி சமாதனப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.
இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளனர்.