25 வயது மனைவியுடன் டிக்டாக்கில் கலக்கிய 45 வயது விவசாயி…! திருமணமான 4 மாதத்தில் சோகம்

கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில் வைரலாகிய 45 வயது விவசாயி திருமணமான ஐந்து மாதத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.25 வயது பெண்ணை மணந்த விவசாயி-கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(45), இவர் மேனகா என்ற 25 வயது பெண்ணை திருமணம் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.மேனகா கடந்த வருடம் அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்டவர் ஆவார்.

மனைவியுடன் டிக்டாக்கில் சங்கரண்ணா-நெட்டிசன்களின் கேலி கிண்டலை கண்டுகொள்ளாத குறித்த தம்பதி தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியாகவே கொண்டு சென்றள்ளனர்.அவ்வப்போது டிக்டாக்கிலும் காணொளி வெளியிட்டு அசத்தி வந்தனர். இதில் மேனகா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கின்றார்.

சங்கரண்ணா திடீர் தற்கொலை-இந்நிலையில் சங்கரண்ணா திடீரென மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இதற்கு காரணம் சங்கரண்ணாவின் அம்மாவால் ஏற்பட்ட பிரச்சினையே என்று கூறப்படுகின்றது. ஆம் மாமியார் மருமகள் பிரச்சினையில் பெங்களூர் சென்று தனியாக வாழலாம் என்று கணவரிடம் கூறியுள்ளார் மேனகா.

மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சங்கரண்ணாவின் உடலை பார்த்து மனைவி மற்றும் அம்மாவும் கதறி அழுதுள்ளனர். பின்பு பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் குற்றச்சாட்டு-கணவரின் தற்கொலை குறித்து மோகனா கூறுகையில், நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தோம், எனது மாமியார் என்னிடம் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டும், தனது கணவரிடம் தன்னைப் பற்றி தவறாக பழி போட்டும் குற்றம் சாட்டினார்கள்.

மேலும் தனது தாய் தந்தையுடன் பேசக்கூட அனுமதிக்காமல் என்னிடம் சண்டையிட்டார். இப்படி எல்லாம் இருந்தால் இங்கே குடும்பம் நடத்த முடியாது என்று என் கணவர் கூறியதற்கு, மாமியார், அப்படின்னா செத்து போ என்று என் கணவரை திட்டினார்.இதனால் தான் தனது கணவர் தற்கொலைசெய்து கொண்டார் என்றும் தற்போது தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *