ரயில் பெட்டியில் ஏன் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கிறது தெரியுமா? இனி அர்த்தம் தெரிஞ்சிட்டு ஏறுங்கள்!

இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூடுதலாக நம்ப முடியாத பல சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது. பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது.

இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள்.

இந்த மஞ்சள் நிற கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும். பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும்.

ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக இருக்கும்.இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்குமுனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள் இருக்கும்.இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது.

மறக்காமல் இதையும் படியுங்க   கனடாவில் நவம்பர் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய work permit விதிகள்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares