வவுனியாவில் பெண்ணொருவருக்கு இருவரால் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வவுனியாவில் வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் அங்கு பெண்ணொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வியாபார நிலைய உரிமையாளரான பெண்ணின் தங்க சங்கலியே திருடிச் செல்லப்பட்டுள்ளது.

வவுனியாவில் பூந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் பீடி தருமாறு கூறியதுடன், குறித்த பெண் பீடியை எடுத்துக் கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares