Skin Glowing Tips: எப்போதுமே முகம் பளபளக்க இந்த 6 டிப்ஸ் போதும்

பொதுவாக அனைவருக்குமே முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும், இதற்காக கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

அப்போது தீர்வு கிடைத்தாலும் பலருக்கும் இதனால் பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடும், எனவே இயற்கையான முறையில் முகத்தை பளபளக்கச் செய்யும் வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒரு கிண்ணத்தில் கால் கப் கடலை மாவு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு பால் மற்றும் ரோஸ் வாட்டர் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும், இதனை 20 நிமிடங்களுக்கு முகத்தில் அப்ளை செய்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவினால் பலனை பெறலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பாக ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும், 15 நிமிடங்களுக்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் காட்டன் துணியை நனைத்து முகத்தில் வைத்து எடுக்கவும், இதையே தொடர்ந்து செய்யவும்.

சிறிதளவு ஆரஞ்ச் சாறுடன் ரோஸ் வாட்டர் கலந்து கொண்டு, முகத்தில் அப்ளை செய்யவும், 15 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் பலன் உண்டு.

காய்ச்சாத பசும்பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து வருவதும் முகத்தை பளபளக்கச் செய்துவிடும்.

கற்றாழையின் தோல் சீவிவிட்டு ஜெல்லை மட்டும் கொண்டு முகத்தில் மசாஜ் செய்யவும், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும், இதனை வாரத்திற்கு இருமுறை செய்துவந்தால் சருமம் இளமையாகும்.

தக்காளி பழத்தை இரண்டாக வெட்டி விட்டு, அதில் காபி தூள் சிறிதளவு தூவி முகத்தில் மசாஜ் செய்து வ்ந்தாலும் கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமாக மாறும்.

Shares