உங்க பெயர் இந்த எழுத்துக்களில் ஆரம்பிக்கிறதா? அப்போ ராஜ வாழ்க்கை அமையுமாம்…

பொதுவாகவே குழந்தை பிறந்தவுடன் முதலில் ஏற்படும் குழப்பம் என்ன பெயர் வைப்பது என்பது தான்.குழந்தை வயிற்றில் இருக்கும் போதே பலரும் என்ன பெயர் வைக்கலாம் எனவும் யோசித்து வைத்திருப்பார்கள்.என்னதான் முன்கூட்டியே தயார் செய்திருந்தாலும் குழந்தை பிறந்தவுடன் ஜாதகத்தை கணித்து தான் பெயர் வைக்கவே முடிவு செய்வார்கள்.

காரணம் பெயர் ஆரம்பிக்கும் எழுத்துக்கும் குழந்தையின் எதிர்காலத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் பெயரின் எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஒரு நபரின் பெயர் அவரது தொழில் மற்றும் ஆளுமையில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த எழுத்துக்களில் பெயர் ஆரம்பித்தால் சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எழுத்துக்கள்

A எழுத்து -ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் A என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் நேர்மையானவர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதியுடையவர்களாக இருப்பார்கள்.

இந்த எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் வாழ்க்கை முழுவதும் செல்வ செழிப்புடன் இருப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் பெரிய தொழிலதிபர்களாகவே இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அசாத்தியமானதை செய்யும் திறமையை கொண்டிருப்பார்கள்.

K எழுத்து – K என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். பிறப்பிலேயே லட்சுமி தேவி மற்றும் குபேரனின் ஆசீர்வாதம் இவர்களுக்கு இருக்கும்.

அவர்கள் வாழ்வில் பணத்துக்குப் பஞ்சமே வராது. அவர்கள் இயற்கையில் மிகவும் எளிமையானவர்கள்.எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்கள்.

P எழுத்து – P என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் மிகவும் அமைதியானவர்களாகவும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்ககூடியவர்களாகவும் இருப்பார்கள்.

இயல்பிலேயே வசீகர தோற்றம் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பணம் மற்றும் பெயர் இரண்டையும் இலகுவில் பெற்றுவிடுவார்கள்.இன்னும் சொல்லப்போனால் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள்.

S எழுத்து- S எழுத்தில் பெயர் பெயர் ஆரம்பித்ததால் மிகவும் நேர்மையானவர்களாக இருப்பார்கள். எந்த ஒரு வேலையிலும் வெற்றியை அடைய பல்வேறு சவால்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் எந்த வேலையை கொடுத்தாலும் செய்வார்கள். போராடியேனும் வெற்றியை தனதாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்

மறக்காமல் இதையும் படியுங்க   மைம் கோபி வெளியிட்ட கடைசி உரையாடல் இது தான்
Shares