கால்சியத்தின் ஆதாரமாக பார்க்கப்படும் பால் அத்தியாவசியமான உணவுப்பொருள், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமான ஒன்று. எலும்புகள் வலிமை அடையவும், தசைகளுக்கும் பால் இன்றியமையாதது, தினமும் ஒரு டம்ளர் பாலாவது அருந்த வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பதிவில் பாலில் ஏலக்காய் போட்டு குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம். உணவில் சுவைக்காக நறுமண பொருளாக ஏலக்காய் சேர்க்கப்படுகிறது, பிரியாணி, புலாவ், தேநீர் போன்றவற்றில் ஏலக்காயை பயன்படுத்துகிறோம்.
மசாலா பொருளாக மட்டுமின்றி இதிலுள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது, மலச்சிக்கல், வாயு, வயிறு உப்புசம் போன்றவற்றிற்கு தீர்வளிக்கிறது.
வாய் துர்நாற்றத்தை போக்குகிறது, மன அழுத்தத்தை போக்குவதுடன் ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
ஏலக்காய் பாலின் பயன்கள்
2 அல்லது 3 ஏலக்காய் எடுத்து ஒரு டம்ளர் பால் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், இவற்றை வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் அருந்து பருகலாம். தூங்கும் முன் இப்படி குடிப்பதால் மன அழுத்தம் நீங்கி மன ஆரோக்கியம் மேம்படும், இதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். இதனால் சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் வேலைகளை தொடரலாம், இதற்கு காரணம் செரோடோனின் ஹோர்மோன் வெளியீட்டை தூண்டுவதே ஆகும்.