திடீர் எடை இழப்புக்கு இதுவும் ஒரு காரணமா? சிகிச்சை தீவிரப்படுத்துவது அவசியம்

பொதுவாக சிலர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பார்கள். திடீரென எடை குறைந்து பார்ப்பதற்கு யாரோ போன்று காட்சியளிப்பார்கள்.

இப்படியானவர்கள், இது இயற்கையாகவே ஏற்படும் மாற்றம் என நினைத்து கொண்டு உரிய சிகிச்சை எடுக்காமல் இருப்பது தவறு.

அதிலும் குறிப்பாக பெண்கள், இவர்கள் எடை இழப்பு ஏற்படும் பொழுது இது சாதாரணம் என நினைப்பார்கள். ஆனால் இது ஒரு நோய் நிலைமையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

அந்த வகையில் திடீர் எடை இழப்பு ஏன் ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
எடை இழப்பிற்கான காரணம்

1. மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால் எடை இழப்பு ஏற்படும். ஏனெனின் மன அழுத்தம் என்பது மூளையுடன் தொடர்புடைய விடயமாக பார்க்கப்படுகின்றது. மூளை உடலுக்கு கலோரிகளை குறைக்குமாறு கட்டளையிடும். இதனால் எடை இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

2. திடீரென எடை இழப்பு ஏற்படுகின்றது என மருத்துவரிடம் சென்றால் அவர்கள், முதலில் பரிந்துரைப்பது டைப் 2 நீரிழிவு பரிசோதனையை தான். நீரழிவு நோயின் ஆரம்ப கட்டத்திலும் எடை இழப்பு ஏற்படலாம்.

3. உடலில் தைராய்டு சுரப்பு அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுது “ஹைபர் தைராய்டு” அல்லது “ஓவர் ஆக்டிவ் தைராய்டு” ஏற்படுகின்றது. இப்படியான நேரங்களில் எடை குறைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. எடை அதிகரிக்கும் பொழுது எப்படி தைராய்டு பரிசோதனை செய்கின்றோமோ அதே சமயம் குறையும் போதும் செய்வது சிறந்தது.

4. உடல் ஆரோக்கியத்தை போன்று மன ஆரோக்கியமும் மனிதனுக்கு மிகவும் அவசியம். மன ஆரோக்கியம் குறையும் பட்சத்தில் பதற்றம், பயம், மனசோர்வு, அதிகப்படியான தூக்கம், வெறுப்பு இப்படியான பிரச்சினைகள் வரும். இதன் காரணமாக கூட எடை இழப்பு ஏற்படலாம்.

5. இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் பொழுது எடை இழப்பு ஏற்படலாம். உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது அது குடல் பகுதியில் இன்ஃபிளமேஷன்களை உண்டு பண்ணும். இது போன்ற நேரங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாது. இப்படியான சமயங்களில் உடலில் வெப்பம் அதிகரித்து கலோரிகள் எரிப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   முடி வளர்ச்சியை மும்மடங்கு அதிகரிக்கும் ரோஸ்மேரி எண்ணெய்: இனி எச்சரிக்கையா இருங்க
Shares