இலங்கையில் அழகு கலை நிலையத்திற்கு சென்ற பெண் செய்த மோ.சமான செயல்!

களுத்துறை – மொரகஹஹேன கோனபொல பகுதியில் உள்ள அழகு கலை நிலையம் ஒன்றிற்கு வந்து உரிமையாளரை அச்சுறுத்தி தங்க நகைகளை கொள்ளையடித்த பெண் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த அழகு கலை நிலையத்திற்கு கள்ளக்காதலனுடன் வந்த பெண், உரிமையாளரை கூரிய ஆயுதத்தை காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.

தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்ற பெண், சம்பவ தினத்தன்றே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் தனக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகக் கூறி பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபரான பெண், வைத்தியசாலையில் இருந்து தப்பி அயல் வீட்டில் இருந்த ஆடைகள் மற்றும் 14,000 ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து தப்பியோடி ஒளிந்திருந்த பெண்ணை மொரொன்துடுவ பிரதேசத்தில் வைத்து 19 நாட்களின் பின்னர் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தில் பிலியந்தலை மடபாத பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares