மொபைல் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்? இந்த தவறை செய்யாதீங்க

மொபைல் போனை சார்ஜ் செய்யும் சில தவறுகளை செய்தால், மொபைல் போனின் ஆயுளை குறைத்துவிடுமாம்.

மொபைல் போன் சார்ஜ்
மொபைல் போனை சார்ஜ் போடும் போது பலரும் தவறுகளையே செய்கின்றனர். பெரும்பாலான நபர்களுக்கு மொபைல் போனை எவ்வாறு சார்ஜ் போட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கின்றது.

போனை திரும்ப திரும்ப சார்ஜ் போடுவது பிரச்சினையை ஏற்படுத்தும். ஆம் பேட்டரி சார்ஜ் குறையக்கூடாது என்பதற்காக அடிக்கடி போடுவது தவறாகும்.
உங்களது போனின் பேட்டரி நீண்ட நாட்கள் வர வேண்டும் என்றால், அதனை பராமரிப்பதில் கவனம் செலுத்தவும்.

அதாவது 20 சதவீதத்தில் மொபைல் போனை சார்ஜ் செய்துவிட்டு 80 அல்லது 90 சதவீதம் வந்த பின்பு சார்ஜிலிருந்து எடுத்துவிட வேண்டும்.
நீங்கள் 0 சதவீதத்தில் இருந்து சார்ஜ் போட்டாலோ, 80 சதவீதத்திற்கு மேல் சார்ஜ் போட்டாலோ மொபைல் சூடாகி வெடிக்க வாய்ப்பு உள்ளது.

மொபைலை நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் நினைத்தால் பாதியளவு சார்ஜ் செய்வது சிறந்ததாகும்.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் உங்கள் மொபைலை இயக்கவும், பேட்டரியை பாதுகாப்பாக வைத்திருக்க 50 சதவீதம் சார்ஜ் செய்ய வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரை செய்கின்றது.

மேலும் மொபைல் போனை குளிர்ந்த மற்றும் உலர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். குளியலறையில் மொபைல் போனை கொண்டு சென்றால் ஈரப்பதத்திற்கு ஷார்ட் சர்க்யூட் ஆகி தீப்பற்ற ஆரம்பிக்கும்.
அதே போன்று போலி சார்ஜரையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Shares