காதலை கழட்டி விட நினைத்த காதலனுக்கு யுவதி கொடுத்த சப்ரைஸ்.. இலங்கையில் நடந்த சம்பவம்.!

கம்பளை பிரதேசத்தில் காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய19 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த யுவதி 22 வயது இளைஞர் ஒருவருடன் ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளைஞர் கடந்த சில நாட்களாக யுவதியுடனான காதலை முறித்துக் கொள்ள முயன்ற நிலையில் இது தொடர்பில் யுவதியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் யுவதி, இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து யுவதி தனது சகோதரன் மற்றும் தாயுடன் இளைஞனை சந்திப்பதற்காக மீன் சந்தை ஒன்றிற்குள் சென்றிருந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யுவதி இந்த இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைதான யுவதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *