அமெரிக்காவில் விவசாயம் செய்யும் நெப்போலியன்!! தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் உள்ளே!!

நெப்போலியன் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவரின் இயற்பெயர் குமரேசன். இயக்குனர் பாரதிராஜா தான் அறிமுகப்படுத்தும் நடிகர்களின் பெயரைச் சொல்கிறார். அப்படி நெப்போலியனைப் பார்த்த பாரதிராஜா, ஹீரோ நெப்போலியன் போல இருந்ததால் நெப்போலியன் என்று பெயரிட்டார். அந்தப் பெயரே இப்போது அவருக்கு அடையாளமாகிவிட்டது.

பாரதிராஜாவின் புது நெல்லு புது நாத்து படத்தில் வில்லனாக அறிமுகமான நெப்போலியன், தொடர்ந்து ரஜினியின் எஜமான் படத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஹீரோவாக நடித்த நெப்போலியனுக்கு சீவலப்பேரி பாண்டி திருப்புமுனை படமாக அமைந்தது. இதன்பிறகு அவர் நடித்த எட்டுப்பட்டி ராசா படம் நெப்போலியனை எங்கும் பிரபலமாக்கியது. இதன் மூலம் குறுகிய காலத்தில் அபார வளர்ச்சி கண்ட நெப்போலியனை அரசியலுக்கு அழைத்துச் சென்றார் கலைஞர்.

தற்போது திமுக அமைச்சராக இருக்கும் கே.என்.நேருவின் உறவினரான நெப்போலியனுக்கு 2001 சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக நிற்க கலைஞர் வாய்ப்பு அளித்தார். நெப்போலியன் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகி அந்தத் தொகுதி மக்களுக்குச் சிறந்த சேவை செய்தார். அமெரிக்காவில் உள்ள அவரது வீடு, நெப்போலியனின் மகன்கள் மீது கொண்ட பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அரண்மனை போன்ற அந்த வீட்டை மகனுக்காக கவனமாக செதுக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். மகன் தனுஷுக்கு நடக்க முடியாததால், அவர் வீட்டின் எந்தப் பகுதிக்கும் சுதந்திரமாகச் செல்வதற்காக பிரத்யேகமாக லிப்ட்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

இளைய மகன் குணால், கூடைப்பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர், எனவே அவருக்காக வீட்டிற்குள் கூடைப்பந்து மைதானம் உள்ளது. இதுதவிர குடும்பத்துடன் திரைப்படம் பார்ப்பதற்கு ஒரு உள் தியேட்டரும் உள்ளது. குடிப்பழக்கம் இல்லாத, நெப்போலியன் தனது விருந்தினர்களுக்காக ஒரு அறையில் மது பாட்டில்களை வாங்கி அடுக்கி வைக்கிறார். நெப்போலியனின் வீட்டில் மொத்தம் 4 சொகுசு கார்கள் உள்ளன. தனது இரண்டு மகன்களில் ஒருவருக்கு டெஸ்லா காரும், மற்றொன்று பென்ஸ் காரும் வாங்கிய நெப்போலியன் தனது சொந்த உபயோகத்திற்காக டொயோட்டா காரை வைத்துள்ளார். இது தவிர, நெப்போலியன் தனது குடும்பத்துடன் பயணிக்க லிப்ட் வசதியுடன் கூடிய சொகுசு வேனும் வைத்துள்ளார். அமெரிக்காவின் அரச வாழ்க்கை வாழ்ந்து வரும் நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது அமெரிக்க விவசாய தோட்டம் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.