இலங்கைக் குயில்கள் கில்மிஷா – அசானிக்கு கிடைத்த வாய்ப்பு..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் வெற்றியாளரான இலங்கையைச் சேர்ந்த கில்மிஷா மற்றும் அசானி இருவரும் ஜேர்மனியில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ளனர்.

குறித்த இசை நிகழ்ச்சியானது ஏப்ரல் 20ஆம் திகதி ஜேர்மனியிலுள்ள Eventhalle Schwelm GmbH எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளரான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இதற்காக ஜேர்மனியில் இருக்கும் தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தகவல்கள் தெரிகின்றன, மேலும் EpicMonkeys என்ற நிறுவனமே இதற்க்கு அனுசரணை வழங்குவதாகவும் கூறப்படுகின்றது.

ஈழத்து ரசிகர்களும் கில்மிஷா மற்றும் அசானியின் இந்த பயணத்துக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட பிறநாட்டவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *