முல்லைத்தீவில் பெரும் சோகம் – ச டலமாக மீட்க்கப்பட்ட இளம் தாய்..!

புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து உடலமாக மீட்கபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முல்லைத்தீவு புதுகுடியிருப்பு போலீஸ் பிரிவு உட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதி ஒன்றில் வீட்டில் இருந்த இளம் குடும்பப் பெண் கிணற்றிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று 10-02-24 அதிகாலை இடம் பெற்றுள்ளது.

ஒன்பதாம் வட்டார பகுதியில் வசித்து வரும் டெனிஸ்ரன் கீர்த்தனா என்ற இளம் குடும்பப் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்த நிலையில் கடந்த 12 நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வீடு திரும்பிய அவர் வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

இதன் பின்னர் குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள் கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியும் கண்டுபிடிக்கவில்லை இன்று அதிகாலை வீட்டு கிணற்றுக்குள் இருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்டவர் இளம் தாயின் இந்த உயிரிழப்பு தொடர்பில் புது குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குறித்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிடிவாத குணத்தால் எதையும் சாதிக்கும் ராசியினர் இவர்கள் தான்: யார் யார்னு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *