jaffna7news

no 1 tamil news site

Article

காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுவனுக்குள் இப்படி ஒரு திறமையா? டீச்சர் வெளியிட்ட வீடியோவைப் பாருங்க…!

திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய மாற்றுத்திறனாளி சிறுவனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.

பொதுவாகவே காது கேட்காத, வாய்பேச முடியாத சிறுவர்களுக்கு நிறைய திறமைகள் இருக்கும். அதனால் தான் ஊனமுற்றவர்கள் என்னும் வார்த்தையையே தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் என அவர்களது திறமையையும் மதிப்பீடு செய்தே புதிய வார்த்தையை உருவாக்கியது. அந்த அளவிற்கு இன்று மாற்றுத்திறனாளிகள் பலரும் சகலதுறைகளிலும் அசத்துகின்றனர்

அந்தவகையில் இங்கேயும் ஒரு அரசுப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் தர்ஷன் என்னும் மாணவனுக்கு வாய் பேச முடியாது. அந்த சிறுவனுக்கு காதும் கேட்காது. ஆனால் அவனுக்குள் அற்புதமான சில திறமைகள் இருக்கிறது. கிராப்ட் வேலைப்பாடுகளில் அந்த சிறுவன் அசத்துகிறான். அதாவது, காகிதத்தில் பூ செய்வது தொடங்கி, ஓவியம் வரைந்து ஆச்சர்யமூட்டுவது வரை அசத்துகிறான். இதோ நீங்களே இந்தச் சிறுவனின் திறமையைப் பாருங்கள். இணையத்தில் ஒரு லட்சம் பேர் இதைப் பார்த்து ரசித்துள்ளனர். இதோ அந்தக் காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares