யாழ்.சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிப்பு; பறிபோகுமா மக்களின் காணிகள்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் , காணி சுவீகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்க பல்வேறு தரப்புக்களும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

குரும்பசிட்டி , கட்டுவான் ,குப்பிளான் வடக்கு
அதேவேளை வலி.வடக்கு பிரதேசத்தில் இன்னமும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.

குறித்த , காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்களால் பல வருடங்களாக கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருவதுடன் , காணி விடுவிப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு என 500 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதன்படி குரும்பசிட்டி , கட்டுவான் மற்றும் குப்பிளான் வடக்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள காணிகளும் சுவீகரிக்கப்படவுள்ளன. அதில் மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளும் உள்ளடங்கியுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில், அந்த கிராம அமைப்புக்கள் அண்மையில் கூடி ஆராய்ந்து, தமது காணிகளை சுவீகரிக்கும் திட்டங்களை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முதல் கட்டமாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுப்பது என தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares