விஜய்யின் திடீர் முடிவால் கதறி அழும் சிறுவன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

விஜய்யை நினைத்து சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் விஜய்.

இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் கடைசியாக இவர் நடிப்பில் “லியோ” திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” என்ற திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது.

கதறிய சிறுவன்

இந்நிலையில் தற்போதைய படத்தை முடித்துக்கொடுத்து விட்டு அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக விஜய் அறிவித்ததுடன் கட்சியின் பெயரையும் வெளியிட்டார்.

விஜய் அரசியலுக்கு வருவது சந்தோசம் என்றாலும், இனி திரைப்படங்களில் அவரை பார்க்க முடியாது என ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

அந்த வகையில், சுமாராக 2 – 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் விஜய்யின் படங்கள் மற்றும் பாடல்கள் வெளியாகாது என நினைத்து அழும் வீடியோயொன்று வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *