மது குடிக்கவேண்டாம் என கண்டித்த மனைவி அடித்துக் கொலை : கணவன் தலைமறைவு!!

கோயில் திருவிழா அன்று குடிபோதையில் வந்த கணவனைக் கண்டித்த மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தாவணகெரேவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் உள்ள கிரமகொண்டனஹள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹனமந்தா(28). இவரது மனைவி அர்பிதா(24). இவர்களின் கிராமத்தில் நேற்று இரவு கிராம தெய்வ வழிபாடு நடைபெற்றது.

இதனால் ஹனமந்தா வீட்டிற்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். குடிப்பழக்கம் உள்ள ஹனமந்தா நேற்றும் வழக்கம் போல மது குடித்து விட்டு வந்தார்.

இதனால் அவரது மனைவி அர்பிதா எரிச்சலடைந்தார்.தனது கணவனான ஹனமந்தாவை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.