மன்னிச்சிடுங்க டாடி.. நாங்கள் பிரிந்துவிட்டோம்.. அழுதபடி பேசிய நடிகர் ராஜ்கிரண் மகள் பரபரப்பு வீடியோ..!

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா தற்போது தனது கணவனை பிரிந்து விட்டதாக சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா சின்னத்திரை நடிகரான முனிஷ் ராஜா என்பவரை 2022ம் ஆண்டு தன்னுடைய வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

முனிஷ் ராஜா ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் தான் பிரபலமானார். இது மட்டுமல்லாமல் இவர் இன்னும் சில சீரியல்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் இவர் நடித்திருக்தாலும் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. முனிஷ் ராஜாவும் பிரியாவும் சமூகவலைத்தலங்களில் தான் காதலித்து வந்துள்ளனர்.

இதனை அடுத்து முனிஷ் ராஜா மற்றும் பிரியா இருவரும் தங்கள் காதலை திருமணத்திற்கு எடுத்து செல்லும் ஆர்வத்தோடு இரு வீட்டிலும் பேசினார்கள்.

ஆனால் ராஜ்கிரண் வீட்டில் இந்த திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
பிரியா

இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரண் தனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்பதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில் பிரியா தன்னுடைய வளர்ப்பு மகள்தான் என்றும், தன்னை அசிங்கப்படுத்தவே இந்தத் திருமணம் செய்து கொண்டார் எனவும், இனிமேல் தன் பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது எனவும் கடுமையாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பிரியா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ காட்சியை பதிவிட்டுள்ளார்.

அந்த காட்சியில் பிரியா கூறியது ‘நான் கடந்த 2022 ம் ஆண்டு நடிகர் முனிஷ் ராஜாவை திருமணம் செய்து கொண்டேன்.

ஆனால் அது சட்டபூர்வமான திருமணம் இல்லை, இதை நான் கூறியாக வேண்டும். தற்போது நாங்கள் பிரிந்து விட்டோம், நாங்கள் பிரிந்து சில மாதங்கள் ஆகின்றது.

இந்த திருமணத்தால் நான் எனது அப்பாவை காயப்படுத்தி விட்டேன். இதற்காக அவரிடம் நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது.

என்னை மன்னித்து விடுங்கள் டாடி“ என்று அழுதுகொண்டு கூறியுள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares