கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது. நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
இந்த வகையில் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகின்றார். செயல்களுக்கு ஏற்ப பலனைத் தருகிறார், அவர் ஒரு நபரின் மீது தீய பார்வையை செலுத்தினால், வாழ்க்கையே வீணாகிவிடும்.
அந்த வகையில் இந்து மதத்தில் சனி பகவானுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதம் 2 ராஜயோகங்கள் கூடி வரப் போகிறது.
இந்த ராஜயோகம் சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கையால் 500 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கின்றது. இதனால் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சனிபகவான் துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் இடம்பெயரும் , அதே நேரத்தில் சுக்கிரன் ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.
துலாம் ராசியினருக்கு பிள்ளைகளால் சில நல்ல செய்திகள் வந்தடையும். இந்த காலப்பகுதியில் இவர்கள் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் வெற்றியடைவார்கள். மனதில் இயல்பாகவே ஒரு தெளிவு பிறக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர் ஜாதகத்தில், சுக்கிரன் செல்வத்தின் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிபகவானின் யோகம் கும்ப ராசியில் பிரதிபலிக்கும். எதிர்பாராத பணவரவுகளை கிடைக்கும். நிதி நிலைமை சீராகும்.
இந்த காலப்பகுதியில் தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சொத்துக்களை வாங்குவதாலும் அல்லது விற்பனை செய்வதாலும் நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.மிதுன ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி 9 வது வீட்டில் சஞ்சரிக்கும் போது, ஒரு நபரின் ஜாதகத்தில் சுக்கிரன் 12 ஆம் வீட்டிற்ககு இடம்பெயர்கின்றார்.
இந்த காலப்பகுதியில் நிதி நிலைமை சீராக இருக்கும். எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பாதையை நோக்கியே செல்லும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகமான பலனை அனுபவிப்பீர்கள்.