சீதாப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? இனிமேல் மிஸ் பண்ணாதீங்க

பொதுவாகவே பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாததாக காணப்படுகின்றது. பொட்டாசியமும் சோடியமும் சமநிலையில் இருக்கக்கூடிய சில பழ வகைகளில் சீதாப்பழமும் ஒன்று.

வெப்பமண்டல நாடுகளில் இலகுவில் கிடைக்கக்கூடிய பழங்களுள் ஒன்றான சீதாப்பழத்தில் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றது.

இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீதாப்பழத்தின் மருத்துவ பயன்கள்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சீதாப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் சோடியமும் துணைப்புரிகின்றது. அதிகப்படியான மக்னிசீயம் கொண்ட உணவுகள் இதயத்தின் தசைகளை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவும்.

இதனால் மாரடைப்பு, பக்க வாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது. சீதாப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் நியாசின் போன்றவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

சீதாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரிபோஃபிளேவின் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது. ப்ரீ-ரேடிக்கல்ஸை எதிர்த்துப் போராடி சருமச் செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கிறது.

வயதாவதால் ஏற்படும் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தவிர்க்க சீதாப்பழத்தை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

​சீதாப்பழத்தில் நிறைய பிளவனாய்டுகள் இருக்கின்றன. இவை புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

அதோடு சீதாப்பழத்தில் ஆல்கலாய்டுகள் மற்றும் அசிட்டோஜெனின் போன்றவை அதிகமாக இருக்கின்றன.

சீதாப்பழத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதன் வாயிலாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது. இதனால் புற்றுநோய் அபாயம் 90 சதவீதம் குறைவடைகின்றது. சீதாப்பழத்தில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இது நம்முடைய உடலில் உள்ள நீர்த்தன்மையைச் சமநிலைப்படுத்தி மூட்டுகளில் அமிலங்களின் சேர்க்கை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச் செய்கிறது. இது கீழ் வாதம் போன்ற நோய்களின் அறிகுறிகளில் இருந்து தடுக்க உதவுகிறது.

எலும்புகளை உறுதிப்படுத்தும் கால்சியமும் சீதாப்பழத்தில் அதிகமாக இருக்கிறது.​ சீதாப்பழத்தில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்திருக்கிறது. இது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களைச் சமநிலையில் வைத்திருக்கச் செய்யும்.

அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல்வேறு நரம்பு மண்டலம் மற்றும் மூளை தொடர்புடைய பிரச்சினைகளைச் சரிசெய்ய வைட்டமின் பி உதவுகிறது. இது சீதாப்பழத்தில் அதிக அளவில் இருக்கிறது.​

சீதாப்பழத்தில் உள்ள ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் தொற்றுக்களால் ஏற்படும் வலியைக் குறைக்கும். சீதாப்பழத்தின் இலைகளிலும் அதிக அளவு ஆன்டி – ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.​

சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் போது சருமங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதான தோற்றத்தை உண்டாக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஆண்களுக்கு இந்த ரகசியத்தை… தெரியாமல் பா.ர்த்து.க்கொள்ளுங்கள்.தெரிந்தால் அவர்.கள் அ.தை .கைவிட .மாட்.டார்கள்…!

இந்த வயதான தோற்றத்தைச் சரிசெய்து சருமத்தை இளமையாக வைத்திருக்க சீதாப்பழம் உதவும். சீதாப்பழம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

அதனால் சரியான அளவில் சருமத்துக்கு புரதங்களும் கிடைப்பதால் சுருக்கங்கள் ஏற்படாமல் தவிர்த்து சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் வைத்திருக்க துணைப்புரிகின்றது.

நம்முடைய உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இல்லாத போது அனீமியா என்னும் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியான அளவில் இருக்கும்போது தான் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனும் சரியான அளவில் கிடைக்கும்.

சரியான அளவில் ஆக்சிஜன் சென்று சேராமல் இருந்தால் இதயம், நுரையீரல் போன்ற பல உறுப்புகள் பாதிக்கும். சீதாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இது அனீமியா வராமல் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *