நான் குளிக்கும் போது கூட இதுதான் நடந்தது… பிரதீப் குறித்து விசித்ரா உடைத்த உண்மை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் வெளியேற்றத்தில் நடந்தது என்ன என்பதையும், சக போட்டியாளர்கள் கூறிய குற்றச்சாட்டு குறித்து விசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 23 போட்டியாளர்களில் விசித்ராவும் கலந்து கொண்டார். வீட்டில் வயது அதிகமான நபராக இருந்த விசித்ரா சில வாரங்கள் தான் தாக்குபிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இளம் போட்டியாளர்கள் அனைவரையும் தெறிக்க விட்டு அதிகநாள் இருந்து விளையாடினார். பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதீப் வெளியேற்றப்பட்டார்.

தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து விசித்ரா முதன்முதலாக விளக்கம் கொடுத்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் கூறியது அனைத்தும் பொய் என்று கூறியுள்ளார்.

விசித்ரா கூறிய உண்மை

பிரதீப் கதவை பூட்டாமல் பாத்ரூம் போகின்றார் என்று வைத்த குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே அங்கு பாத்ரூமிற்கு தாழ்ப்பாள் கிடையாது என்றும் நானும் பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்று விசித்ரா பேசியுள்ளார்.

நான் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்தபோது பாத்ரூமுக்கு தாழ்ப்பாள் இல்லை என்பதை பலமுறை கூறியுள்ளேன், பிக் பாஸில் கமெரா முன்பும் கூறினேன்… ஆனால் அவர்கள் செய்யவில்லை… நான் பாத்ரூம் போகும்போது வெளியே வந்து அனைவரிடமும் கூறிவிட்டு தான் குளிக்க செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பிரதீப் விசித்ராவிடம், ஏதோ பிளான் செய்து லாக்கை எடுத்துள்ளனர்.. இதனால் எதாவது பிரச்சினை வரும் என்று என்னிடம் கூறியிருக்கிறார். மேலும் தூங்கும் போது நானும் அவரும் தான் சரியான நேரத்திற்கு தூங்கி காலையில் எழுவோம்… இரவு தூங்காமல் இருக்கின்றான், முறைத்து பார்க்கிறான் என்று கூறியது உண்மை இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   Baakiyalakshmi: பாக்யா மாமனார் இறந்தது ஏன்? திடீரென மாறிய கதைக்கு காரணம் இதோ
Shares