கும்பத்தில் சனி… அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 3 ராசியினர் யார் யார்னு தெரியுமா?

பொதுவாகவே கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் காணப்படுகின்றது.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். நவகிரகங்களின் இடமாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜேதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

சனி பகவான் ஜோதிடத்தில் கர்ம காரகன் அதாவது தொழில், வேலைக்கான, கர்மத்தை கடத்துபவராக கூறப்படுகிறார். இவர் மற்ற கிரகங்களை விட மிக மெதுவாக நகர்கிறார். இரண்டரை ஆண்டுகள் ஒரு முறை ராசி மாற்றம் அடையும் சனி தற்போது 30ஆண்டுகளுக்கு பின்னர் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளார்.

மார்ச் 29, 2025 வரை சனி கும்பத்தில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசியினர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கும்பம்

சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு சாதகமாக சூழலே அமையும். உங்கள் ராசியின் அதிபதி தான் சனி என்பதால், அவரின் ஆசீர்வாதத்தால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.

மேலும், கூட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் நல்ல ஒருங்கிணைப்பை கொடுப்பார்கள். இதன் மூலம் உங்களுக்கு இலாபம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில், சனி பகவான் உங்கள் ராசியில் ராஜயோகத்தை உருவாக்குவதால் பணவரவு சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சனிபகவான் உங்களின் ராசியிலிருந்து ஏழாமிடத்தில் உதிக்கப் போகிறார். இந்த காலப்பகுதியில் நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

உங்கள் எதிரிகளையும் வெல்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும்.

அதே நேரத்தில், சில வணிக ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் வர்த்தகர்களுக்கு பெரும் லாபத்தை ஈட்டிக்கொடுக்கும்.

மேலும், உங்கள் ராசியில் சனி ராஜயோகத்தை உருவாக்குவதால் இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அபரிமிதமாக அதிகரிக்கும்.

மேஷம்

சனிபகவான் உங்களின் ராசியில் இருந்து 11வது வீட்டில் உதயமாவதால், புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது மனதில் மகிழ்ச்சியைத் தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள்.

இந்த காலப்பகுதியில் நிதி நிலைமை சீராக இருக்கும். வியாபரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *