jaffna7news

no 1 tamil news site

Article

பிறந்த தன் குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த செயல்… மனதையே உருகவைக்கும் காட்சி..!

குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.

‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். குழந்தை இல்லாததன் வலி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மட்டும்தான் தெரியும்.

இங்கேயும் அப்படித்தான். ஒருவருக்கு 18 ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. தவமாய், தவமிருந்து அவருக்குக் குழந்தை பிறந்தது. ஆஸ்பத்திரியில் அவரது குழந்தையை நர்ஸ் கொண்டுவந்து முதன் முதலில் அவர் கையில் கொடுக்கிறார். அதைப் பார்த்ததும் சிலிர்த்துப்போன அந்த தந்தை குழந்தையைக் கையில் வாங்கிக்கொண்டு ஓவென்று அழுகிறார். அப்போது அங்கு அவரது மொத்தகுடும்பமும் அந்த உணர்ச்சிப் பெருக்கில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். சாக்லேட்களைத் தூக்கிவீசி மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். இதோ நீங்களே இந்த ஆரவாரமான தருணத்தைப் பாருங்களேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares