குவைத்தில் ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம்., விசா ரத்துசெய்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வளைகுடா நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்கள் ராமரை வழிபட்டு பிராணபிரதிஷ்டை விழாவை கொண்டாடினர்.

ஆனால் சிலர் அளவுக்கதிகமான பக்தியை காட்டி சிக்கலில் மாட்டிக்கொண்டனர்.

குவைத்தில் உள்ள முன்னணி பன்னாட்டு PetroChemical நிறுவனத்தில் சில இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். உள்ளூர் சட்டங்களை மீறி ராமர் கோவில் குடமுழுக்கு தினத்தை கொண்டாடியுள்ளனர்.

ரத்துசெய்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள்

இதனால், அவர்கள் மீது விசாரணை நடத்த அந்நிறுவன நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது, ​​கொண்டாட்டங்கள் குறித்து விளக்கமளிக்க விசாரணையை எதிர்கொண்டுள்ளனர்.

அவர்கள், ஜெய் ஸ்ரீ ராம் உட்பட உணர்ச்சிகரமான கோஷங்களை உச்சரித்து சக நண்பர்களுக்கு இனிப்புகளை பரிமாறியதாக கூறப்படுகிறது.

இதை செய்ததற்காக 9 இந்தியர்களை அங்குள்ள அரசு கைது செய்தது. அவர்களது விசாவை ரத்து செய்து, அதே இரவு விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக்க கூறப்படுகிறது.

நிகழ்வை ஏற்பாடு செய்தவர் யார், இனிப்புகளை கொண்டு வந்தவர் யார்? இந்த கொண்டாட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர்கள் யார் என்பது குறித்து குவைத் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் பதிலளித்துள்ளது. அங்குள்ள நிலவரங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை அளிக்குமாறு குவைத் அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக நாட்டில் அனைத்து வகையான கொண்டாட்டங்களுக்கும் குவைத் தடை விதித்துள்ளது.

இது தவிர, டிசம்பர் 16-ஆம் திகதி குவைத் மன்னர் (அமீர்) ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் சபாவின் மறைவு முதல், நாடு முழுவதும் துக்கம் அமலில் உள்ளது.

இத்தகைய முக்கியமான உத்தரவுகளை மீறி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடியது பெரும் சிக்கலாக மாறியது. இந்த விவகாரத்தின் ஒரு பகுதியாக இந்தியர்கள் தண்டிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

குவைத்தில் சுமார் 9 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதில், மலையாளிகளுக்கு அடுத்தபடியாக ஆந்திராவின் ராயலசீமா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம் என கூறப்படுகிறது. ayodhya ram temple Prana pratishta ceremony, Kuwait Hindus Celebration, Visa Cancelled, Indians in Kuwait

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *