சீக்கிரமா பணக்காரர் ஆகணுமா? அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்

பொதுவாகவே அனைவருக்கும் பணத்தின் மீது ஆசை இருக்கும். ஆனால் உலகில் பெரும்பாலானவர்களின் புலம்பலுக்கும் பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணம் பணம் தான்.

பணம் அதிகரிப்பதற்கு ஏற்ப மனிதர்களின் தேவைகளும் அதிகதரித்துக்கொண்டே இருக்கும் இதனால் தான் பணத்தேவைக்கு ஒருபோதும் வரையறை இருப்பதில்லை.

பணகஷ்டத்தை வாழ்வில் சந்திக்கவே கூடாது என்றால் நாம் முதவில் எண்ணங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம் நம் எண்ணங்களை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆம் நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே மாறிவிடுவோம் என்பது நிதர்சனம்.

பணத்தை ஈர்க்கும் எளிய வழிகள்

பொதுவாக நமக்கு ஏதாவது விதத்தில் பணம் வருகின்றது என்றால் மனம் தானாகவே மகிழ்ச்சியில் இருக்கும். ஆனால் பலரும் அந்த பணத்தை செலவு செய்யும் போது மகிழ்ச்சியாக இருப்பதில்லை, இதுவே நம் கையில் பணம் தங்காதமைக்கு முக்கிய காரணமாகும்.

உண்மையில் நாம் கொடுப்பதை இரட்டிப்பாக திருப்பிக்கொடுக்கும் சக்தி இந்த பிரபஞ்சத்துக்கு உண்டு. நாம் சம்பாதிக்கும் பணத்தில் சிறிய அளவிலாவது தர்மம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

மாதம் ஒருமுறையாவது ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு நல்ல உணவு வாங்கிக்கொடுக்கலாம், இவ்வாறான விடயங்களை மகிழ்ச்சியாக செய்யும் போதும் அந்த மகிழ்ச்சியான எண்ணம் நம்மிடம் அதிக பணத்தை கொண்டுவந்து சேர்க்கும்.

நாம் சொந்த தேவைக்காக அதிகளவில் பணத்தை செலவிடும் போதும் பணத்தை இழக்கின்றோமே என்ற எண்ணம் துளிகூட இல்லாமல் இவ்வளவு பெரிய செலவை செய்வதற்கு என்னிடம் பணம் இருக்கிறதே என்ற மகிழ்ச்சியோடு அந்த பணத்தை வாழ்த்தி செலவு செய்து பாருங்கள் நீங்கள் செலவு செய்த பணம் உங்களிடம் இரட்டிப்பாக திரும்பிவரும்.

முக்கியமாக பணத்தை செலவு செய்யும் போது செலவு என்ற வார்தையை பயன்பத்துவதை தவிர்த்து பாருங்கள் உங்களிடம் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.

உண்மையில் நேரம் மற்றும் தான் செலவாகின்றது ஏனெனில் அது திரும்பி கிடைப்பதில்லை.ஆனால் பணம் சுழற்சி மற்றுமே ஆகின்றது. செலவாவது இல்லை என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

இருந்தால் தானே தர்மம் செய்யலாம் என்னிடம் இல்லையே என்று கூறுபவர்கள் அதிகம். நம்மிடம் 10 ரூபாய் இருந்தால் அதில் 2 ரூபாயை தர்மம் செய்யும் மனம் யாரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கே இந்த பிரபஞ்சம் பணத்தை அள்ளி கொடுக்கும்.

முக்கியமாக தர்மம் செய்வதை யாருக்கும் சொல்லிக்கொண்டு செய்ய கூடாது.உங்கள் மனதுக்கு மட்டும் தெரிந்தால் போதும். இதுவே பணத்தை ஈர்க்கும் மிகப்பெரும் ரகசியம். இவ்வாறான விடயங்களை கடைப்பிடித்தால் பணத்தை தேடி நீங்கள் ஓட தேவையில்லை. பணம் உங்களை தேடி வருவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *