தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் ஒரு உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அந்தவகையில், சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் வெந்தயம் குறித்து மருத்துவர் அருண்குமார் விவரமாக பகிர்ந்துள்ளார்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வெந்தயம்
வெந்தயம் மருத்துவ குணத்திற்க்கான காரணம் அதில் இருக்கும் கேலக்டோமான், செபோனின்ஸ் மற்றும் 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசன் என்னும் வேதிப்பொருட்கள் தான்.
ஆராய்ச்சியில், வெந்தயத்தின் 4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசன் என்னும் வேதிப்பொருள் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் தன்மை கொண்டது என்பது உறுதியானது.
இது முதற்கட்ட சர்க்கரை நோயாளிக்கு சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றது. ஒரு நாளைக்கு 20- 25g வெந்தயத்தை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வெந்தயத்தில் உள்ள கேலக்டோமான் என்னும் வேதிப்பொருள் சர்க்கரை நோயாளிகளின் பசியை உடனடியாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
ஆரம்ப கட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே இந்த வெந்தயம் பயன்தரும். 2, 3-ஆம் கட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வெந்தயம் பயன் தராது.
வெந்தயத்தின் மற்ற நன்மைகள்
தசைகளில் கிளைகோஜன் மீண்டும் உருவாகும் வேகத்தை வெந்தயம் அதிகப்படுத்துகிறது. எனவே விளையாட்டு வீரர்கள் 10- 15g வெந்தயம் எடுத்தால் நீண்ட நேரம் விளையாட முடியும்.
வெந்தயம், மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகளை குறைக்கும் தன்மை கொண்டது என எலிகளுக்கு செய்த ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டது.
மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு தினமும் 10- 15g வெந்தயம் எடுப்பதால் அதன் அறிகுறிகள் குறையும்.
தினமும் 10- 15g வெந்தயம் எடுப்பதால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகரிக்கிறது.