அப்பா இளையராஜாவிடம் சண்டையிட்ட பவதாரணி… யாருக்காக தெரியுமா?

பிரபல பாடகி பவதாரணி தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவிற்காக தந்தை இளையராஜாவிடம் சண்டையிட்டுள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.
பாடகி பவதாரணி

பிரபல இசையமைப்பாளரின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி(47) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் தனது கணவருடன் இலங்கையில் வசித்து வந்துள்ள நிலையில், கடந்த 5 மாதங்களாக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வந்து அதற்கான ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி சென்ற நிலையில் நேற்று மாலை 5.20 மணிக்கு மரணமடைந்த நிலையில், இன்று அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவர் 30க்கும் மேற்பட்ட படங்களில் பின்னணி பாடகியாக பல பாடல்களை பாடியுள்ளதுடன், இவர் பாடிய பாடலுக்கு தேசிய விருதும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தம்பிக்காக அப்பாவிடம் சண்டை

தனது தம்பியும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜாவிற்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்துள்ளார். யுவனை மிகப்பெரிய இசையமைப்பாளராக உருவாக்க பவதாரணி அதிக முயற்சி எடுத்துள்ளதுடன் அதற்காக உறுதுணையாகவும் இருந்துள்ளார்.

யுவனுக்கு மியூசிக் என்றால் என்னவென்றே தெரியாத சின்ன வயதில் பியானோவை யுவனிடம் கொடுத்து அதனை உபயோகித்து சீக்கிரமாக பழகிக்கொள் என்றும் கூறி துணையாக இருந்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவுடன் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. இவர் இரண்டு திருமணம் செய்து மனைவியை பிரிந்துவிட்டார். இவர் திருமணத்தின் போது இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது அக்கா பவதாரணி மட்டும் தான் இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன், முடிவெடுப்பதற்கு யுவனுக்கு உரிமை இருப்பதாக தனது தந்தையிடம் பேசி சண்டையிட்டு, மனதை மாற்றி அவருக்கு சம்மதம் கொடுக்க வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இஸ்லாம் பெண்ணை மணந்ததற்கு சோசியல் மீடியாவில் யுவனுக்கு பல எதிர்மறை கருத்துக்கள் வந்த போதும், பவதாரணி தனது சோசியல் மீடியாவில் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தனக்கு எல்லாமுமாக இருந்த அக்கா உயிரிழந்ததை தாங்கமுடியாமல் இலங்கை சென்ற யுவன் அக்காவின் உடம்பை தாமதமின்றி தற்போது இந்தியாவிற்கும் கொண்டு வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *