ரவுடி பேபி பாடலுக்கு அப்படியே தனுஷ் போல நடனம் ஆடி அசத்திய அரசுப்பள்ளி மாணவனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது அதிக பேரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடல் ரவுடி பேபி. இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும் நடன இயக்குனராக பிரபுதேவா பணியாற்றியிருந்தார். அவரின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி யின் அபாரமான ஆட்டத்தில் இந்த பாடல் மிகவும் பிரபலமானது.
அந்த பாடல் பிரபலமானது தொடர்ந்து பலரும் தங்கள் திறமைகளை அந்தப் பாடலுக்கு வெளிக்காட்டி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து வந்தனர். அந்த வகையில் பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவர் மாணவிகளுடன் சேர்ந்து அந்த பாடலுக்கு நடனமாடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு இணையவாசிகளின் கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகளின் பாராட்டை பெற்ற அந்த வீடியோ உங்களுக்காக இங்கே கீழே கொடுத்துள்ளோம் பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்.