இளையராஜாவின் மகள் பவதாரணி மரணம்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி சிகிச்சை பலனின்றி காலமானார், அவருக்கு வயது 47.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இளையராஜாவின் மகள் பவதாரணி, ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்தார்.

கடந்த 5 மாதங்களாக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது, இந்நிலையில் இன்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.

“மஸ்தானா மஸ்தானா“ பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரணி, “மயில் போல“ என்ற பாடலுக்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.

“மித்ர் மை பிரண்ட்“ என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார், தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

மறக்காமல் இதையும் படியுங்க   சில நாட்களில் திருமணம்.. பற்களை அழகாக்க அறுவை சிகிச்சை செய்த மணமகனுக்கு நேர்ந்த சோ.கம்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *