தருமபுரி மாவட்டத்தின் தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் விபத்து
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியின் இரட்டை பாலத்தின் மீது 2 லொறிகள் மற்றும் 3 கார்கள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
இரட்டை பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தால் கிட்டத்தட்ட 8 கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து பாதிப்புகளால் அணி வகுத்து நிற்கின்றன.
அதே சமயம் போக்குவரத்து பாதைகள் அங்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொப்பூர் கணவாய் பகுதியின் இரட்டை பாலத்தில் விபத்துக்கள் அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது.
கடந்த 12 ஆண்டுகளில் 950க்கும் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.