தேனிலவுக்கு போட்ட பிளானை மாற்றி அயோத்திக்கு கூட்டிச்சென்ற கணவன்: மனைவி ரியாக்ஷன் என்ன?

தேனிலவுக்கு கோவா கூட்டிச்செல்லாமல் அயோத்திக்கு கூட்டிச்சென்றதால் மனைவி ஒரு முடிவு எடுத்துள்ளார்.

கோவா செல்ல மனைவிக்கு ஆசை

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், போபாலில் வசித்து வரும் மென்பொருள் பொறியியல் பட்டதாரி ஒருவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர் தனது மனைவியிடம் தேனிலவுக்காக தென்னிந்தியா மற்றும் கோவாவுக்கு செல்வதாக கூறியுள்ளார். இதனால் அவரது மனைவி ஆசையாக இருந்துள்ளார்.

ஆனால், அந்த நேரத்தில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா வந்ததால் பொறியாளரின் தாயார், தான் கோயில் திறப்பு விழாவை பார்கக ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

இதனால் அவர் தனது மனைவியிடம் தேனிலவு செல்வதற்கு ஒரு நாள் முன்பாக, நாம் அயோத்தி செல்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் அவர், இது என்னுடைய தாயாரின் நீண்ட நாள் ஆசை என்றும் கூறியுள்ளார்.

விவாகரத்து கேட்ட மனைவி

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மனைவி தனது கணவர் மற்றும் மாமியாருடன் இணைந்து அயோத்திக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி தரிசனம் முடித்துவிட்டு அங்கிருந்து போபால் திரும்பியுள்ளனர். அப்போது தான் கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

தேனிலவிற்கு அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு, அயோத்திக்கு தனது கணவர் அழைத்துச் சென்றுவிட்டதாக கூறி விவாகரத்துக்கு மனைவி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதனால், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

கோவா செல்லாமல் அயோத்திக்கு அழைத்துச் சென்ற கணவனிடம் மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   யாழில் ஊசி ஏற்ற தயாராக இருந்த 4 காவலிகள் கைது.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *