நடிகையுடன் நெருக்கம்..விவாகரத்து வரை சென்ற மனைவி!! விஜய் சேதிபதியை வெச்சு செய்த பயில்வான் ரங்கநாதன்..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது டோலிவுட், பாலிவுட் என்று பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்-க்கு ஜோடியாக மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய் சேதுபதி பெரும்பாலும் அமைதியாக இருந்து எந்த கிசுகிசுக்களிலும் சிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் அவரும் ஒருசில செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

துபாயில் இருந்த போது தன் மனைவியை சந்தித்து யாஹோ சாட்டில் பேசி வந்தார். 5 மாதமாக டார்ச்சர் செய்து அதன்பின் இந்தியா வந்தப்பின் அவரை திருமணம் செய்து கொண்டார். தன் மனைவியை காதலித்து தாம் திருமணம் செய்திருக்கிறேன் என்று கூறினார். சமீபத்தில் பிரசாத் லாபில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நடிகைகளுன் நெருக்கமாகவும் ஒரே நடிகைகளுடன் பலமுறை ஜோடிப்போட்டு நடிக்கிறீர்களே.. உங்கள் வீட்டில் குழப்பம் வரவில்லை என்று கேட்டதாக பயில்வான் கூறினார்.

அதற்கு விஜய் சேதுபதி பயில்வானிடம், ஆமாம் எங்கள் வீட்டில் பயங்கர குழப்பம், விவாகரத்து வரை மனைவி சென்றுவிட்டார். அதன்பின் கையில் காலில் விழுந்து சமாளித்து, அவரை சமாதானப்படுத்தி மீண்டும் சேர்ந்ததாக கூறியதாக தெரிவித்திருக்கிறார். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், என்ன கதாபாத்திரத்தில் நடிப்பது என்று தெரியாமல் இருக்கிறது. பல ரோல்களில் நடித்து பிளாப் வாங்கினார்.

தற்போது கத்ரினா கைஃபுடன் லிப் கிஸ் கூட அடித்திருக்கிறார். மேரி கிறிஸ்மஸ் படத்தில் பிரமோஷன் சுத்தமாக இல்லை. பல கோடி சம்பளம் வாங்கிட்டோம் என்கிற அகந்தை தான் காரணம். நக்கலாக பல கேள்விகளுக்கு பதிலளித்தார். பத்திரிக்கையாளர்களை தூஷகமாக நினைப்பது போல் விஜய் சேதுபதி நடந்து கொள்வதாக கூறியிருக்கிறார் பயில்வான்.

நடிக்காமல் மேரி கிறிஸ்மஸ் படத்தில் சம்பளம் வாங்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படியே போனால் மார்க்கெட் இழப்பீர்கள், ராசியான நடிகர் என்ற பெயர் எடுத்தவர் இப்படியாகிவிட்டாரே என்ற ஆதங்கம் தான் எனக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *