திருமணத்தில் மணப்பெண் தனது தோழிகளுடன் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை பெற்று தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இதுபோல் வாழ்க்கையில் ஒரு நடனத்தை பார்த்ததில்லை என்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
முன்பெல்லாம் திருமணம் என்றால் வீட்டில் இருக்கும் சிறுவர்-சிறுமியர் நடனம் ஆடுவதும் அதனை பெரியவர்கள் சுற்றி இருந்து பார்த்து ரசிப்பதும் கைதட்டி உற்சாக படுத்துவதும் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் மணமகனும் மணமகளும் சேர்ந்து சினிமா பாடலுக்கு நடனம் ஆடுவது அவர்களுடன் சேர்ந்து உறவினர்களும் நடனமாடுவது போன்ற நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்து விட்டன.
முன்பெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் வட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்று வந்தது ஆனால் தற்போது அது தென்னிந்தியாவிலும் அதிகம் பின்பற்றப்படும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. அந்த வகையில்தான் திருமணத்தில் மணமகள் தனது தோழிகளுடன் போட்ட வெறித்தனமான ஆட்டம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
வெளியான அந்த வீடியோவில் மணமகளின் வெறித்தனமான ஆட்டமும் அவரது தோழிகளின் வெறித்தனமான ஆட்டமும் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையவாசிகள் பலரும் தங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு நடனம் பார்த்ததில்லை என்று அந்த வீடியோவில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ உங்களுக்காக இங்கே கீழே கொடுத்துள்ளோம் நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.