குழந்தையின் எதிர்காலத்திற்காக, தன்னம்பிக்கையுடன் சவால்களை எதிர்கொள்ளும் அன்புள்ளம் கொண்ட தாய்… தனக்கு எதுவும் தேவையில்லை, குழந்தைக்கு மட்டும் போதும் என நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்…!

போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளிலும், டிராஃபிக் சிக்னல்களிலும் சிறுவர்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் பூக்கள், பழங்கள் , துணிமணிகள், செருப்புகள், பேனாக்கள், புத்தகங்கள் என வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள். மக்கள் கூட்டமாக செல்லும் பகுதிகளில் சாலைகளின் ஓரத்தில் வியாபாரம் செய்வார்கள். மேலும் பெரிய துணிக்கடைகள், சூப்பர்மார்கெட் போன்று மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சிறு வியாபாரம் நடைபெறும்.

சாலையில் வைத்து விற்கப்படும் தரமான பொருட்களில் மக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு செல்வார்கள். காலை முதல் மாலை வரை வெயிலையும், தூசியையும் பொருட்படுத்தாது அன்றாட தேவைகளுக்காகவும், செலவுக்காகவும் தெரு வியாபாரிகள் சிரமத்தை பொருட்படுத்தாது, கடின உழைப்பில் வாழ்ந்துவருகிறார்கள். சுமார் 20வயது இளம் தாய் ஒருவர் தன் ஐந்து மாத குழந்தையை கைகளில் வைத்துக்கொண்டு இன்னொரு கைகளில் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்படும் உயிர் எழுத்து புத்தங்களையும், சிறுவர்களுக்கான கதை புத்தகத்தையும், ஆங்கில எழுத்துக்களை கொண்ட புத்தங்கங்களையும் ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு கொண்டு விற்றுக்கொண்டிருக்கிறார்.

இதை கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர் தன்னால் முடித்த சிறு உதவியை செய்வதாக கூறி உங்களுக்கு ஏதாவது வேண்டுமா என கேட்டதற்கு அவர் தனக்கு எதுவும் வேண்டாம் என மறுத்ததோடு தன்னுடைய குழந்தைக்கு தேவையான பொருட்களை வாங்கி தருமாறு கேட்டார். ஏழ்மையான சூழ்நிலையிலும், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு தனக்கென யோசிக்காத இந்த பெண்மணியின் அன்பை சமூகவலைத்தளவாசிகள் பாராட்டி கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Shares