உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன? உங்களுக்கு இந்த பண்புகள் கட்டாயம் இருக்கும்…

நாம் ஒவ்வொருவரும் தமிழில் நம் பெயரை எழுதுவதைப் போல ஆங்கிலத்திலும் எழுதுவதுண்டு. அதன் படி ஆங்கிலத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும் ஒரு வகை ஜோதிடம் உண்டு.

அதன்படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரம்பித்தால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விசேட பண்புகள்

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் குறிக்கோள் கொண்டவர், தைரியமானவர், தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் மற்றும் மனஉறுதியுடன் எல்லாவற்றையும் செயல்படுத்துவீர்கள். எல்லா விஷயங்களிலுமே நீங்கள் நடைமுறையில் சிந்திப்பவர். ஆனால் உங்களுடைய லாஜிக்கான அணுகுமுறை உங்கள் உறவை பாதிக்கும். உங்களுக்கு தலைமைத்துவப் பண்புகள் இயல்பாகவே இருக்கும்.

B என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு பிரைவேட் நபர். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்று விரும்புவீர்கள். வாழ்வில் என்ன வருகிறதோ அதை நீங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வீர்கள். சொகுசாக வாழ பிடிக்கும், மற்றவர்கள் உங்களை பார்த்துக் கொள்வது உங்களுக்கு பிடிக்கும்.

C என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர், மற்றவர்களை ஊக்குவிப்பதில் சிறந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்களை நம்ப வைப்பதில் உங்களுக்கு நல்ல திறமை இருக்கிறது. உங்கள் பேச்சு ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும், சிறந்த பேச்சாளர்களாக இருப்பீர்கள்.

D என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நேர்மையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வதை உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் அதே போல ஒழுக்கமான வாழ்க்கையைப் பின்பற்றவும், நெறிமுறைகள் தவறாமல் வாழவும் நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் வியாபாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள்.

E என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அதிக கற்பனைத் திறன் கொண்டவர். நீங்கள் உங்களுடைய கற்பனை உலகில் வாழ முயற்சி செய்கிறீர்கள். உங்களின் கற்பனை சக்தி, உங்களை படைப்பாற்றலில் சிறந்த நபராக இருக்க உதவுகிறது.

F என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அக்கறையாக இருப்பீர்கள், அன்பாக, நேர்மையாக மற்றும், விசுவாசத்துடனும் இருக்க முடியும் என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறீர்கள். இருப்பினும், உங்களிடம் மோசமான குணமும் உள்ளது.

G என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கான வரிசையில் இருக்க முயற்சிப்பீர்கள். உங்களுக்கு எல்லாமே முழுமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் கடின உழைப்பாளியாக இருந்தாலும், நீங்கள் மற்றவர்களின் வேலையை செய்ய விரும்ப மாட்டீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை?

H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் கொடுக்கும் குணம் கொண்டவர். எல்லாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மனம் உங்களுக்கு இருக்கும். பொதுவாக நீங்கள் பொறுப்பாக இருப்பீர்கள்.

I என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஆழமாக சிந்திப்பவர், அன்பானவர் மற்றும் பழகுவதற்கு இனிமையானவர். நீங்கள் அன்பு கொண்டவர்கள் மீது அக்கறையாக பார்த்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்களுக்கு தானாக முன்வந்து உதவி செய்வீர்கள்.

J என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் செல்வாக்கு மிக்கவர், லட்சியவாதி, மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர். உங்களிடம் அதிக ஆற்றல் உள்ளது. காதல் மற்றும் உறவுகள் என்று வரும்போது கூட உங்கள் இலட்சியத்தை பின்பற்றுவீர்கள்.

K என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மர்மமான நபர், உணர்ச்சிமிக்கவர மற்றும் வசீகரமாக இருப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை, அமைதி, நல்லிணக்கம் மற்றும் சமநிலையாக இருப்பதையே விரும்புகிறீர்கள்.

L என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், சொந்தமாக உங்கள் வழியில், உங்கள் முயற்சியில் நீங்கள் வாழ விரும்புகிறீர்கள். எல்லோரும் செய்கிறார்களே என்று நீங்களும் டிரெண்டிகை பின்பற்றவோ, நகலெடுக்கவோ அல்லது ஏதாவது பயிற்சி செய்யவோ விரும்ப மாட்டீர்கள்.

M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் நம்பகமானவர் மற்றும் கடின உழைப்பாளி. நீங்கள் உங்கள் வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறீர்கள். Workaholic என்று உங்களைக் குறிப்பிடலாம்.

N என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் சுதந்திரமாக இருப்பதை விரும்புகிறீர்கள். கூட்டமாக ஒரு மந்தையைப் போல செயல்படுவது மற்றும் பின்தொடர்வது உங்களுக்குப் பிடிக்காது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்களால் இயன்ற அளவுக்கு சிறப்பாக செய்ய விரும்புவீர்கள்.

O என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் நம்பகமானவர், இரக்கமுள்ளவர், மற்றும் உணர்ச்சிவசப்பதுபவர். உங்கள் குழந்தை மனம், ரசிக்க அனுமதிக்கும் செயல்களை நீங்கள் விரும்பி செய்வீர்கள்.

P என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்களுக்கு எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும். நீங்கள் அனைவரிடம் எளிதாக பழகுவீர்கள். இலகுவாக பழகக்கூடிய நபர்களுடன், மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் இருப்பதையே விரும்புகிறீர்கள்.

Q என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், மற்றவர்களுக்கு நீங்கள் ஒரு புதிரான நபராகத் தான் பெரும்பாலும் வெளிப்படுவீர்கள். உங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

R என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் வெளிப்படையான நபர், திறந்த மனதுடன் அனைவரையும் அணுகுவீர்கள். நீங்கள் பெரிய சமூக அமைப்பை, அதில் ஒரு அங்கமாக செயல்படுவதை விரும்புகிறீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   இன்னும் 5 நாட்களில் வரவிருக்கும் சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசியினர் யார் தெரியுமா?

S என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் கவர்ச்சிகரமானவர், பேச்சில் அனைவரையும் வசப்படுத்துபவர். நீங்கள் மிகவும் ரொமான்டிக்கான நபராக அறியப்படுவீர்கள். காதலுக்கு, நட்புக்கு மற்றும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

T என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் தந்திரசாலி. தேவைப்படும் திறன்களை நீங்களாகவே வளர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக மோதல் நிறைந்த சூழ்நிலைகளை எதிளில் சரி செய்யும் திறன் கொண்டவர்.

U என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் எப்போதுமே முழு மனதுடன் மகிழ்ச்சியாக வாழ விரும்புவீர்கள். எளிதில் வளைந்து கொடுத்து செல்வீர்கள். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள் என்றாலும், ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்டும்.

V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்களுக்கென்று தனியுரிமை இருக்கின்றது, அதை நீங்கள் அடைய வேண்டும் என்ற தேவையை வெளிப்படுத்துகின்றன. நினைவாற்றல் அதிகம். கூர்ந்து கவனத்து விஷயங்களை உள்வாங்கிக் கொள்வீர்கள்.நீங்கள் பல விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வதில் மிகவும் சிறந்தவர்.

W என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் அமைதி அற்றவர் மற்றும் அலைபாயும் மனம் கொண்டவர் என்பதை உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன. காலம், நேரத்தின் அழுத்ததால், நீங்கள் பொறுமையை இழக்க நேரிடலாம்.

X என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் சுதந்திரமாக வாழ விரும்புவதையும், சுதந்திரத்தை முழுவதுமாக, எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுபவிக்க விரும்புவதையும் உங்கள் ஆளுமை வெளிப்படுத்துகின்றன.

Y என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், உங்கள் ஆளுமை இதுதான் என்று உங்களை பொருத்துவதில் மிகவும் சிரமம் ஏற்படலாம். ஏனென்றால், எப்போதுமே நீங்கள் உங்கள் விருப்பப்படி அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்.

Z என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் மிகவும் டிப்ளமேட்டிக்கான நபர். ஏனோ தானோவென்று நடந்து கொள்ள மாட்டீர்கள். குறிக்கோள் நிறைந்த வாழ்க்கையில் அதை செயல்படுத்த அதிக ஆற்றல் உண்டு.

Shares