நான் உன்னை விட்டு எங்கேயும் போகலை… சாமியாருக்குள் வந்திறங்கிய கேப்டன்! வாக்கு கொடுத்தது என்ன?

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது குரலில் சாமியார் ஒருவர் வாக்கு கூறியுள்ளது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவினால் காலமானார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொது மக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.

தற்போதும் அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரேமலதா, விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஒரு சாமியார் ’கேப்டன் எங்கும் போகவில்லை, உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

பின்பு தொடர்ந்து திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப் போறேன். பிரேமா பூவையும், பொட்டையும் எடுக்கக்கூடாது. உன் இதயத்தில் தான் நான் குடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்ட பிரேமலதா ஒரு கணம் நெகிழ்ந்து கண்கலங்கியுள்ளார். இக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *