முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டைச் சுற்றி ஏராளமான இடம் இருந்தது. இப்போதெல்லாம் வீடுகள் பிற இடங்களையும் சேர்த்து வியாபித்துவிட்டது. வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் இடம் இருந்தாலும் அதையும் கட்டி வாடகைக்கு விட்டு விடுகிறார்கள். சிட்டி வாழ்க்கையை கேட்கவே வேண்டாம். வீட்டுக்குள்ளேயே வாசிங் மிஷினில் துவைத்து, வீட்டுக்குள்ளேயே கயிறுகட்டி அதை காய போடவும் செய்து விடுகிறார்கள்.
இதனால் ஏற்படும் அபாயங்களை அவர்கள் தெரிந்திருக்க வில்லை. அப்படி என்ன ஆபத்து என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். ‘’பாக்டீரியா, பூஞ்சான் என நம் கண்ணுக்குத்தெரியாமல் இருக்கும் நுண்ணியிரிகளுக்கு மிகவும் பிடித்தது ஒன்று இருக்கிறது. அது என்ன தெரியுமா? அதுதான் ‘’ஈரப்பதம்”! அதற்கு நாம் வீட்டிலேயே துணியை காய போடுவதன் மூலம் அவர்களை வரவேற்கிறோம்.
இந்த நுண்ணியிரிகள் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையே பலவீனப்படுத்திவிடும். அண்மையில் பேராசிரியர்கள் நிக் ஆஸ்போன், கிறிஸ்டைன் கெவி ஆகியோர் ஒரு ஆய்வு நடத்தினார். அதில் ‘’ஈரப்பதமுள்ள காற்றில் இருக்கும் நுண்ணுயிரிகள் காற்றோட்டம் குறைவாக இருக்கும் நம் வீடுகளுக்குள் காயவைக்கும் துணிகளோடு வந்து ஒட்டிக் கொள்கின்றன. இது இயல்பாக நடக்கிறது. இவை அரைகுறையாக காய்ந்த துணிகளில் வாடையை உருவாக்குகின்றன. அந்த ஆடையை அதன் உரிமையாளர் அணியும்போது, அது அவருக்கு மூச்சுக்குழல் வழியாக நுழைந்து விடும்.
இவை நோய் எதிர்ப்பு சக்தியை வீழ்த்தி ஆஸ்துமா உருவாகவும் வழிவகுக்கும். இந்த நுண்ணியிரிகளின் வளர்ச்சி வீட்டில் காயப்போடும் துணியில் 30 சதவிகிதம் அதிகமாம். இதனால் நன்கு வெளியில் இருக்கும், வெளிப்பகுதியில் தான் துணியை உலர்த்த வேண்டும் என்கிறது இந்த ஆய்வு.
வீட்டுக்குள் துணி துவைத்து, வீட்டுக்குள்ளேயே காயப்போடுவதில் இத்தனை சிக்கல்களா