தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ் 6 பேர் இப்போ என்ன செய்றாங்கனு தெரியுமா?

தமிழில் இதுவரை நடந்து பிக் பாஸ் சீசன்களின் டைட்டில் வின்னர் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிக் பாஸ் சீசன் 1

பிக் பாஸ் சீசன் ஒன்றில் டைட்டிலை ஆரவ் வென்றுள்ளார். இந்த சீசன் மிகவும் புதிது என்பதால் உள்ளே சென்ற போட்டியாளர்கள் விளையாட முடியாமல் கடுமையாக திணறினர்.

அதுமட்டுமின்றி காதல் சர்ச்சை, தற்கொலை என இந்த சீசனில் தான் அரங்கேறியது. தற்போது ஆரவ் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளரான ரித்விகா. துணை நடிகையாக வலம் வந்தார். தற்போதும் அதே கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். கடந்த ஆண்டு யாவரும் வெல்வர் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3

இதுவரை நடந்த 7 சீசன்களிலும் மக்களை அதிகமாக மகிழ்வித்த சீசன் என்றால் அது பிக் பாஸ் சீசன் 5 என்று தான் கூற வேண்டும். பாடல்கள் பாடி மக்களின் மனதில் இடம்பிடித்த முகேன் ராவ், டைட்டில் வின்னரானார்.

இவர் சில படங்களில் ஹீரோவாக நடிப்பதுடன், ஆல்பங்களில் தனது பாடல்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 4

பிக்பாஸ் சீசன் 4ல் தனி ஆளாக நின்று ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் சமாளித்த ஆரி பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். பிக்பாஸில் இருந்து வெளியில் வந்த பிறகு சில படங்களில் நடித்தாலும், அவை எதுவும் பெரிதாக ஓடவில்லை. இவர், தற்போது தெலுங்கு வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5

பிக்பாஸ் நிகழ்சியின் 5வது சீசனின் வெற்றியாளர், ராஜூ. சீரியல் நடிகராக இருந்த இவர், தற்போது பல மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 6

இந்த 6வது சீசனில் பல சர்ச்சைகளை அசீம் கடந்து வந்தாலும், இவரே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆனார். இவரது வெற்றிக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் தற்போது எந்த படத்திலும் நடிக்கவில்லை.

பிக் பாஸ் சீசன் 7

பிக் பாஸ் சீசன் 7 இன்று இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று நடந்த இறுதிநாளின் விழாவில் அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *