கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியம்: வானில் நிகழ்ந்த அதிசயம்

மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 16 ஆம் நாள் காரியத்தின் போது கருடன் சுற்றிவந்த அதிசய நிகழ்வு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனிறி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28ம் திகதி உயிரிழந்தார்.

கேப்டன் விஜயகாந்தின் மரணம் தேமுதிக தொண்டர்கள், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

தன்னை நம்பி வந்த யாரையும் வெறும் வயிற்றோடு அனுப்பியது கிடையாது, அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டே இருப்பார் என பலரும் புகழ் அஞ்சலியே செலுத்தினர்.

அவரின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, கருடன் சுற்றி வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.

இதேபோன்றதொரு சம்பவம் 16ம் நாள் காரியத்தின் போதும் நடந்துள்ளது, இதை பார்த்த பொதுமக்களும் கருடனை வணங்கினர், இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *