மக்களின் விருப்பங்களே அபிவிருத்தி திட்டங்களாக அமைய வேண்டும் – அதுவே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ்!

மக்களின் விருப்பங்களின் அடிப்படையிலேயே அபிவிருத்தி திட்டங்கள் அமைய வேண்டும் என்பதே தன்னுடைய நிலைப்பாடு என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்திற்கான இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர், மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற திணைக்களங்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மன்னாரில் மேலும் காற்றாலைகள் அமைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பதில் அளித்த அமைச்சர்,

“குறித்த காற்றாலைகள் அமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் மற்றும் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி தெளிவுபடுத்தியிருந்தார்.

அதன்போது மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மௌனமாகவே அமர்ந்திருந்தனர்.

ஜனாதிபதியுடனான புரிந்துணர்விற்கு பங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அமைதியாக இருந்தார்களா அல்லது குறித்த திட்டத்தினை ஏற்றுக் கொண்டு அமைதியாக இருந்தார்களா என்பதை அவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

என்னைப் பொறுத்த வரையில் மக்களின் விருப்பங்களும் நலன்களுமே முக்கியமானது. எனவே ஒவ்வொரு திட்டங்களினாலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகள் பாதிப்புக்கள் தொடர்பாக ஆராய்ந்தே முடிவுகளை எடுப்பேன்.” என்று தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான குலசிங்கம் தீலிபன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமன்னார் பங்குத்தந்தையும் மன்னார் பிரஜைகள் குழு தலைவருமான மார்க்கஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது!

மறக்காமல் இதையும் படியுங்க   7 வயது மகளுக்கு தாய் செய்த கொடுமை; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *