மனதில் ரகசியங்களை புதைத்து வைத்திருக்கும் ராசியினர் இவர்கள் தான்…யார் யார்னு தெரிமா?

பொதுவாக ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தனிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள்.சிலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வெளிப்படையாக எல்லா விடயங்களையும் பகிர்ந்துக்கொள்வார்கள்.

ஆனால் சிலரோ தங்களுக்குள்ளேயே பல ரகசியங்களை பூட்டி வைத்திருப்பார்கள். அதை ஒருவரிடமும் சொல்ல மாட்டார்கள். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் அதிக ரகசிங்களை ஒளித்து வைத்திருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்

மகர ராசிக்காரர்கள் மன உறுதி மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள், ஆனால் அவர்களின் மனதில் பல ரகசியங்கள் புதைந்திருக்கும். மகர ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பார்கள். தங்கள் வெளியே சொல்ல விரும்புவதை மட்டுமே சொல்வார்கள்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே துப்பறியும் நபர்கள். இந்த நபர்களின் ஆர்வமுள்ள இயல்பு பெரும்பாலும் மற்றவர்களைப் பற்றிய மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர வழிவகுக்கிறது.

ஆனால் தங்களின் சொந்த ரகசியங்களை விருச்சிக வெளியே சொல்லமாட்டார்கள்.இவர்களிடம் அதிகமான இரகசியங்கள் புதைந்திருக்கும்.
மீனம்

மீன ராசிக்காரர்கள் கனவு மற்றும் கற்பனை இயல்புக்கு பெயர் பெற்றது, ஆனால் இவர்கள் தங்கள் உண்மையான உணர்வுகளையும் எண்ணங்களையும் மறைப்பதில் திறமையானவர்கள்.

ஒரு மீன ராசிக்காரரின் ஆன்மாவின் ஆழத்தைத் திறக்க பொறுமையும், புரிதலும் தேவை. அவர்கள் மிகவும் உறுதியான மனநிலையில் இருப்பார்கள். இலகுவில் எதையும் வெளிப்படுத்த மாட்டார்கள்.