‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும்.
‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும். குழந்தைக்காக இதனால் தான் பலரும் தவம் இருக்கிறார்கள். இங்கேயும் ஒரு குட்டிக்குழந்தை செய்த செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி அந்தக் குழந்தை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?
பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டு சேட்டையும் செய்துகொண்டிருந்த குட்டிக்குழந்தையை அவரது, தாயார் கண்டிக்கிறார். பிடித்து வைத்து மிரட்டி, வாயை மூடு என்கிறார். உடனே குழந்தை வாயை மூட மாட்டேன் என மீண்டும், மீண்டும் சொல்லி அழுகிறது.
ஆனால் குழந்தையை விடாமல் மிரட்டிய அவரது அம்மா, வாயில் கை வை என்கிறார். கடைசியில் டெரராக மாறிய அந்தக் குழந்தை, அம்மாவின் முடியைப் பிடித்து ஆட்ட அம்மா கடைசியில் ஓவென்று கதறிவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).