ரேஷன் அட்டையில் புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை எப்படி சேர்ப்பது என்ற சந்கேகம் சிலருக்கு இருக்கும்.
இந்தியா- தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் வீட்டில் புதிதாக குழந்தையொன்று பிறந்து விட்டால் அவர்களையும் அந்த அட்டையில் சேர்க்க வேண்டும் என்றால் சில ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்.
இந்திய அரசின் சலுகைகளை பெற ரேஷன் அட்டை என்ற ஒரு ஆவணம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
இதனை அடிப்படையாக கொண்டு தான் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த அட்டையில் வீட்டில் உள்ள அனைவரின் பெயரும் இருப்பது முக்கியம்.
ஏற்கனவே ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் பிறந்த குழந்தைகளின் பெயரையும் சேர்க்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.
பெயரை சேர்ப்பதற்காக அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக வீட்டில் இருந்தப்படியே நாம் ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.
அப்படியாயின் ரேஷன் அட்டையில் எப்படி புதிய பெயரை சேர்ப்பது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
புதிய பெயரை சேர்ப்பது எப்படி?
1. உணவுத் துறை இணையதளத்திற்கு சென்று “Add member to ration card” என்ற ஆப்ஷனை தெரிவு செய்யவும்.
2. அதில் கேட்கும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
3. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், குடும்பத் தலைவரின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல், குழந்தையின் ஆதார் ஆகியவற்றை கொண்டு பதிவேற்றம் செய்வது அவசியம்.