கருட புராணம் என்பது இந்து சமய பதினெண் புராணங்களில் பதினேழாவது புராணமாகும். வைணவ புராணமான இதில் விஷ்ணுவும் கருடனும் உரையாடுவது போன்று அமைந்துள்ளது.
மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவி போன்றவைகளைப் பற்றி இதன் இரண்டாம் பகுதி விளக்குகிறது.
ஒருவர் இறந்த பின்பு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் தான் கருட புராணம்.
கருட புராணத்தை வீட்டில் படிக்கக்கூடாது ஏன்?
இறப்பதற்கு முன்பு செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது.
இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகின்றது. இதனால் சாதாரண நாட்களில் இதனை படிக்கக்கூடாது என்று கூறப்படுகின்றது.
ஆனால் இந்நூலில் உள்ள விடயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். ஆனாலும் புத்தகம் என்பது மற்றவர்கள் படிப்பதற்காகத் தான்.
இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோவில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.