இந்த ராசிக்காரர்களுக்கு சோதனைகள் சாதனைகளாக மாறும்! – இன்றைய ராசி பலன்கள்(09.01.2024)!

இன்றைய ராசிபலன் ஜனவரி 9, 2024, சோபகிருது வருடம் மார்கழி 24, செவ்வாய் கிழமை, சந்திரன் விருச்சிகம், தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார். மேஷ ராசியில் உள்ள பரணி, கிருத்திகை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று நாளும் உங்களுக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது.உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாடாக இருக்கும். என்று உங்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் . எண்ணம் வரலாம். உங்கள் பேச்சு, செயலில் கவனம் தேவை. இன்று தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. என்று உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க சரியான திட்டமிடல் அவசியம். இன்று விநாயகர் வழிபாடு செய்து விட்டு எந்த ஒரு காரியத்தையும் தொடங்கவும்.
​வார ராசிபலன்: 2024 ஜனவரி 8 முதல் 14 வரை – மேஷம் முதல் கன்னி வரை

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டத்தின் துணையுடன், உங்களின் தடைப்பட்ட வேலை செய்து முடிக்க முடியும். காதல் விஷயத்தில் உற்சாகம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் நிதி சார்ந்த விஷயங்களில் கொஞ்சம் பொறுப்பாக செயல்படவும். பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்பவர்கள், கவனமாக சிந்தித்து செயல்படவும். உணவு பொருட்கள் வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். என்று உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். என்று சில விதிமுறைகளை வகுத்து அதன்படி நடந்து கொள்வது அவசியம். உங்களின் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் சம்பந்தமான நடவடிக்கைகளை எடுப்பதில் சுமாரான பலன்கள் கிடைக்கும். புதிய வேலை தொடங்கும் விநாயகர், மகாலட்சுமி வழிபாடு செய்வது நல்லது. என்று உங்களின் பேச்சில் ஆணவம் தென்படும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய நாள். காதல் விவகாரங்களில் நிதானமாக நடந்து கொள்ளவும். திருமண வாழ்க்கையில் அமைதி அதிகரிக்கும். வியாபாரத்தில் தந்திரமாக செயல்பட வேண்டியது இருக்கும். பணியிடத்தில் பெரிய விஷயங்களுக்கு கூட நெருக்கடி ஏற்படும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைவதில் முழு மூச்சாகச் செயல்படுவோம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உங்களின் வேலைகளையும், குடும்ப பொறுப்புகளையும் சரியாக முடிக்க முடியும். திருமணம் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில புதிய மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். புதிய வேலை தேடக்கூடியவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் ஆளுமை திறன் மேம்படும். சமூக பணிகளில் ஈடுபட்டு இருக்கக்கூடிய அவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். உங்களுக்கு புதிய உறவுகள், நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்களின் தைரியம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை உருவாகும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வேலையை முடிப்பதில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சிறிய முன்னேற்றங்களில் கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். திருமணம் ஆனவர்கள் இல்லற வாழ்க்கையில் காதல் அதிகரிக்கும். உணவகங்கள் நடத்தக்கூடியவர்களுக்கு அதிக லாபம் ஈட்டுவார்கள். வியாபாரத்தில் உங்களின் செயல்பாடு நல்ல லாபத்தை பெற்று தரக்கூடியதாக இருக்கும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் எல்லாவித விருப்பமும் நிறைவேறும். தனிப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் பேச்சு, நடத்தையில் சாதக பலன்கள் கிடைக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் பெற்ற மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் மகிழ்ச்சியை தரும்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று பிரகாசமான வாய்ப்பு கிடைக்கும். உங்களின் நேர்மறை ஆற்றலால் எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் சமாளிக்க முடியும். பிரச்சனைகளை எளிதாக பேசித் தீர்ப்பீர்கள். இன்று கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் சரியான திட்டங்களுடன் செயல்படவும். உங்கள் பணியில் விசுவாசம் அதிகரிக்கும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மற்றவர்களுக்காக ஏதாவது தியாகம் செய்ய வேண்டியது இருக்கும். நண்பர்களுடன் பேசி உங்களின் மனக்குறை குறைத்துக் கொள்வீர்கள். திருமண வாழ்க்கையில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தாம்பத்திய பிரச்சனைகள் தீர்ந்து, உறவு சிறக்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் காண்பீர்கள். இன்று உங்களின் நேர்மறையான சிந்தனைகள் மூலம் முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது. தொழில் தொடர்பாக கடன் வாங்க நினைப்பவர்களுக்கு, அது கிடைக்க வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் தனிமையாக உணரலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்சனைகள் உங்களுக்கு மன குழப்பத்தை தரக்கூடியதாக இருக்கும். காதல் விஷயங்களில் அதிர்ஷ்டசாலியாக உணர்வீர்கள். என்று மனைவியை மகிழ்விக்க முயற்சி செய்வீர்கள். என்று புதிய தொழிலை தொடங்க முயல்வீர்கள். உற்சவத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவை பேணுவது அவசியம்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மங்களகரமான நாளாக அமையும். உங்களுடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களின் பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று நீங்கள் சில முக்கியமான நிதி முடிவுகளை எடுக்க வேண்டியது இருக்கும். உங்களின் பணிச்சுமை அதிகமாக இருக்கும். இருப்பினும் கவலைப்படாமல் அதை செய்து முடிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *