புத்தாண்டு பிறந்துவிட்டால், வீட்டில் காலண்டர் மாற்றுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் இவ்வாறு புத்தாண்டு காலண்டரை எந்த திசையில் மாட்ட வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புத்தாண்டு காலண்டரை எங்கு மாட்ட வேண்டும்?
வாஸ்து விதிகளின்படி, புதிய காலண்டரை பழைய காலண்டரின் மேல் வைக்கவோ, பழையதை உங்கள் வீட்டில் எங்கும் வைக்கவோ கூடாது.
புதுவருட பிறப்பிற்கு பின்பு புதிய காலண்டரை வைக்க சிறந்த இடம் மேற்கு திசையாகும்.
ஏனெனில் மேற்கு திசை என்பது மங்களகரமானதாக நம்பப்படுகின்றது. இந்த திசையில் வைக்கும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
குபேர திசையான வடக்கு திசையைப் பார்த்தும் காலண்டரை வைக்கலாம். இந்த திசையில் காலண்டரை வைத்தாலும் வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி காலண்டரை எந்த காரணம் கொண்டும் தெற்கு திசையை பார்த்தவாறு வைக்கக்கூடாது.
தெற்கு திசையை பார்த்து வைத்தால், மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும். பண இழப்புகளை சந்திக்கும் சூழலும் ஏற்படும்.
வாஸ்துப்படி, காலண்டரை எப்போதும் கதவு அல்லது கதவுக்கு பின்புறம் வைக்கக்கூடாது. அதே போல் ஜன்னலுக்கு அருகே வைக்கக்கூடாது.