உலக பணக்காரரின் ஒரே வாரிசு: 40,000 கோடி ரூபாய் சொத்தை விட்டு துறவி வாழ்க்கை

உலகளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவரான த.ஆனந்தகிருஷ்ணனின் ஒரே மகனான வென் ஆஜன் சிரிபான்யோ துறவியாக முடிவெடுத்து வாழ்ந்து வருகிறார். டெலிகாம் உலகில் ஏ.கே என்றழைக்கப்படுவர் த.ஆனந்தகிருஷ்ணன், czar என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

டெலிகாம் மட்டுமின்றி Media, எண்ணெய், gas, ரியல் எஸ்டேட் மற்றும் Satellite போன்ற துறையிலும் இவருக்கு சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி 9 பெருநிறுவனங்களிலும் முதலீடு செய்துள்ளார், இவரது சொத்துமதிப்பு மட்டும் 5 பில்லியன் டொலர்கள் ஆகும், இந்திய மதிப்பின் படி ரூ.40,000 கோடிகள்.

இந்தியாவில் மிகப்பிரலமாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் இவர் தான். தற்போது மலேசியாவில் மிக முக்கியமான பணக்காரராக அறியப்படும் ஆனந்தகிருஷ்ணனின் ஒரே மகன் வென் ஆஜன் சிரிபான்யோ.

இவர் சிறுவயதில் தனது சகோதரிகளுடன் இங்கிலாந்தில் வசித்து வந்ததாகவும், 8 மொழிகள் சரளமாக பேசக்கூடியவர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய 18வது வயதில் புத்த மத துறவியானார், சிறிது காலத்திற்கு துறவறத்தை மேற்கொள்ளலாம் என வேடிக்கையாக இதை செய்யத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது இதுவே நிரந்தர அடையாளமாக மாறிப்போக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக துறவத்திலேயே இருக்கிறாராம்.

40,000 கோடி ரூபாய்களுக்கு ஒரே வாரிசு, தந்தையின் வழியில் அவரது நிறுவனத்தை எடுத்து நடத்துவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஆஜன் சிரிபான்யோவின் இந்த முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தாய்வழி உறவின் படி தாய்லாந்தின் அரச குடும்பத்து வாரிசும் இவர் தான் என கூறப்படுகிறது.

Shares