16 இலட்சத்தை பங்கு போட பிளான் போட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள்.. லீக்காகிய தகவல்

பெட்டியில் இருக்கும் பணத்தை பங்கு போட பிளான் போட்ட பிக்பாஸ் போட்டியாளரின் திட்டம் சமூகவலைத்தளங்களில் கசிந்துள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 வது நாளை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

அதிலும் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர். வெளிச்சத்திற்கு வரும் பிளான் இந்த நிலையில், நேற்றைய தினம் பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இணை பிரியாத தோழிகளாக சுற்றித்திரிந்த மாயா – பூர்ணிமா இருவரில் பூர்ணிமா இப்படியொரு முடிவு எடுத்தது மாயா உட்பட ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாறாக மாயா தான் பூர்ணிமாவை பணத்தை எடுக்க கூறியதாகவும், வெளியில் வந்தவுடன் பணத்தை இரண்டாக பங்கு போட்டு கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவர் இப்படி கூறிய பின்னர் தான் பிக்பாஸ் பூர்ணிமா பணப்பெட்டியை எடுத்து கொண்டு வெளியேறியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி பார்த்த இணையவாசிகள், “ அப்போ இவர்கள் வெளியிலும் ஒன்றாக தான் இருக்க போகிறார்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   நடிகை ஐஸ்வர்யா மேனனின் மயக்கும் கடற்கரை போட்டோஷூட்..
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares